மழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம்!
ADDED :4179 days ago
மேலூர்: மேலூர் அருகே வெள்ளலூரில் மழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் ஏழு நாட்கள், எண்ணெய் தாளிதம் மற்றும் மாமிசம் சாப்பிடாமல் கடுமையாக விரதமிருந்தனர் பின்னர் மந்தைக் கருப்பண்ண சுவாமி கோவிலில் இருந்து முளைப்பாரியை சுமந்து சின்ன உடைப்பு கண்மாயில் கரைத்தனர். இதனால் மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்றும் நோய் நொடிகள் அண்டாது என்பது நம்பிக்கை.