மாதவ பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம்!
மயிலாப்பூர் : மயிலாப்பூர், மாதவ பெருமாள் கோவிலில், நேற்று நடந்த தேர் திருவிழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலாப்பூர், மாதவ பெருமாள் கோவிலில், சித்திரை திருவோணம் பிரமோற்சவத்தின் ஏழாம் நாளான, நேற்று, தேர் திருவிழா நடந்தது. காலை 7:30 மணிக்கு, பக்தர்கள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவிலை சுற்றியுள்ள, நான்கு மாட வீதிகள் வாயிலாக, வலம் வந்த தேரை, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். பின், காலை 11:15 மணிக்கு, தேர் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து, மதியம் 12:௦௦ மணிக்கு, சுவாமி தேரில் இருந்து, சன்னிதியில் எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு, பெருமாள் காளிங்கநாத்தனம் அலங்காரத்தில், தொட்டிலில், எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு, சுவாமி அருள்பாலித்தார்.