உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உழவார பணி!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உழவார பணி!

அவிநாசி :அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, நாளை (மே 3) கொடியேற்றத்துடன் துவங்கி, 14ம் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி, கோவிலில் உள்ள கொடி மரம், கற்தூண், மண்டபம், பூஜை பொருட்கள் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்யும் உழவார பணி, கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது.அவிநாசி கோவில் சிவனடியார்கள் வழிபாட்டு குழுவினர் சார்பில் நடந்த உழவார பணியில், சிவனடியார்கள் பங்கேற்றனர். அனைத்து இடங்களிலும் தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டன. கொடி மரம் உள்ளிட்ட பித்தளை பொருட்களை, புளி, எண்ணெய் கொண்டு சுத்தமாக்கப்பட்டன. அதேபோல், உற்சவ மூர்த்தி சிலைகளை, கோவில் சிவாச்சாரியார்கள் பராமரிப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !