கமுதி கோயில்களில் கார்த்திகை உற்சவம்
ADDED :4226 days ago
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி கோயில்களில் சித்திரை மாத கார்த்திகை நட்சத்திர உற்சவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கமுதி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில், ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு அபிசேகங்கள் செய்து, வெள்ளிக் கவசங்கள் அணிவித்து, மலர் அலங்காரத்துடன் சிறப்பு தீப ஆராதனை பூஜைகள் நடந்தன. மேலும் ஸ்ரீமீனாட்சி சமேத சுந்தரேசுவரர் கோயிலில் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜையை, அர்ச்சகர் சந்துரு குருக்கள் நடத்தினார். உற்சவ குழுவினர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.