உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுது படையல்
ADDED :4226 days ago
நாகப்பட்டினம், : நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் திருக்கோயில். படைத் தளபதியாக இருந்து, சிவத்தொண்டனாக மாறிய சிறுத்தொண்ட நாயனார் வாதாபி கணபதியை பிரதிஷ்டை செய்த தலம். இத்தலத்தில், இறைவன் பிள்ளைக் கனியமுது கேட்ட ஐதீகநிகழ்வு, சித்திரை பரணி பெருவிழா அமுதுபடையல் நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான அமுதுபடையல் விழா நடந்தது.