ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் சித்திரைத் திருவிழா
ADDED :4177 days ago
சாத்தான்குளம் :ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கொடி மரத்துக்கும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து கோயிலில் பல்வேறு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாள்களில் வீதிப் புறப்பாடும், பல்வேறு வாகனங்களில் வீதிப் புறப்பாடும் நடைபெறுகிறது.