உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை பேட்டை கோயிலில் சமய பண்பாட்டு பயிற்சி

நெல்லை பேட்டை கோயிலில் சமய பண்பாட்டு பயிற்சி

திருநெல்வேலி : பேட்டை பால்வண்ணநாத சுவாமி திருக்கோயிலில் கோடைக்கால சமய பண்பாட்டு பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.  இந்த பயிற்சி முகாமானது மே 1-நேற்று துவங்கி , 10- ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் மாலை,  இரவு  வரை பயிற்சி அளிக்கப்படும். இதில் தெய்வ பக்தி, தேசபக்திப் பாடல்கள், யோகாசனம், விளையாட்டு ஆகியவை கற்றுத்தரப்படும்.  நேற்று மட்டும் 100  -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !