உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருடவாகனத்தில் காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் உலா!

கருடவாகனத்தில் காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் உலா!

காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் அட்சயதிரிசியையொட்டி கருடவாகனத்தில் பெருமாள்  வீதி உலா நடந்தது. காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலின் அட்சயதிரிசியை முன்னிட்டு நித்யல்யாண பெருமாள் சிறப்பு அபிஷேகம் ஆராதனையுடன் கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் முக்கிய வீதிகள் மாதாகோவில் வீதி, திருநள்ளார் சாலை,பாரதியார் சாலை வழியாக வீதி உலா நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நித்யகல்யாணப் பெருமாள் பத்தஜனசபா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !