உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலாகலத்துடன் நடந்த தேர்திருவிழா; குன்னூர் மக்கள் குதூகலம்

கோலாகலத்துடன் நடந்த தேர்திருவிழா; குன்னூர் மக்கள் குதூகலம்

குன்னூர் : குன்னூரில் நேற்று கிராமிய மனம் கமழும் வகையிலான கலாசார நிகழ்ச்சிகளுடன் திருத்தேர் ஊர்வலம் நடந்தது.குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழாவில், குன்னூர் அருகே சந்திராகாலனி பொதுமக்கள் சார்பில், 7ம் ஆண்டு தேர்ஊர்வலம் நடந்தது. விழாவில், சந்திரா காலனி பகுதியில் இருந்து தீர்த்தகுடம் ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட், மவுன்ட்ரோடு வழியாக கோவிலை அடைந்தது. இதில், செண்டை வாத்தியங்கள் முழங்க துவங்கியது. இதில், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், காவடியாட்டம் ஆகியவற்றுடன் குதிரை நடனமாடி ஊர்வலத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. மதியம் 1:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, சந்திராகாலனியில் கேரள பாரம்பரிய முறைப்படி அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடந்தது. சந்திராகாலனி, உட்கோட், கரோலினா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இன்னிசை நிகழ்ச்சி, வாணவேடிக்கை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !