பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா துவக்கம்
ADDED :4176 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள், விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன்) கோயிலில், சித்திரை பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலையில் சிம்மாசனத்தில் சுவாமி - அம்பாள் வீதியுலா நடந்தது. இன்று முதல் காலை, மாலையில் சுவாமி - அம்பாள் நந்திகேஸ்வரர், கிளி, குண்டோதரன், சிம்ம, கைலாச, காமதேனு, ரிஷப, குதிரை வாகனங்களில் வீதியுலா நடைபெறும். மே 9ல் விசாலாட்சி அம்மன் தபசு கோலம், அன்றிரவு மாலை மாற்றல் நிகழ்ச்சி, மே 10 காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணம், இரவு புஷ்பபல்லக்கில் பட்டணபிரவேசம் நடக்கிறது. மே 11 காலை 10.30 மணிக்கு தேரோட்டம், மறுநாள் கொடியிறக்கம், மே 13 ல் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் அகஸ்தியன், மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் செய்து வருகின்றனர்.