உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்களநாதசுவாமி கோயிலில் நாளை சித்திரை விழா:; மே 11ல் திருக்கல்யாணம்

மங்களநாதசுவாமி கோயிலில் நாளை சித்திரை விழா:; மே 11ல் திருக்கல்யாணம்

கீழக்கரை : ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில், சித்திரை விழா நாளை (மே 4ல்) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி இன்று காலை தேங்காய் தொட்டுவாங்குதல், இரவு அனுக்ஞை பூஜை நடைபெறுகிறது. நாளை கொடியேற்றம், மே 11ல் திருக்கல்யாணம், 12ம் தேதி தேரோட்டம், 13ல் தீர்த்தோத்ஸவம், 14ம் தேதி காலை மங்கைப் பெருமாள், குதிரை வாகனத்தில் கோவிந்தன் கோயிலில் எழுந்தருதல் நடைபெறுகிறது. மே 13 வரை காலை மற்றும் மாலையில், சுவாமி வீதி உலா மற்றும் சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திவான் மகேந்திரன், அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !