வேதாரண்யம் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4180 days ago
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகையில் ஆனந்த காமாட்சியம்மன், முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்றுக்காலை 10 மணிக்கு விமரிசையாக நடந்தது.நேற்றுக்காலை 9.30 மணிக்கு நடத்தப்பட்டு, ஞானசேகர சிவாச்சாரியார் தலைமையில் கோபுர கலசங்களில் புனித நீரூற்றி சிறப்பு பூஜை நடந்தது.இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து, நேற்றுக்காலை 11:30 மணிக்கு சென்னை மாஸ்டர் சிவாவின் வயலின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.இதற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர்கள், நிர்வாகிகள், பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.