கீழ்கரை செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4180 days ago
ஆலங்குடி: புதுகை மாவட்டம் ஆலங்குடி செட்டியார்குளம் கீழ்கரையில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, யாகங்கள் வளர்க்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை ஒட்டி அன்னதானம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆலங்குடி காந்திசாலையில் தாயுமான செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவைத் தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை டாக்டர் கோவிந்தராஜ் செய்திருந்தார்.