சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா
ADDED :4277 days ago
சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையில் சங்கரலிங்க சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடக்கிறது. தொடர்ந்து 9–ம் நாள் திருநாளான 11-ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.