பவானியில் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4173 days ago
பவானி : பவானி முதலியார் தெருவில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் உடனமர் ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கடந்த 19ம் தேதி, விநாயகர் பூஜையுடன் தொடங்கிய இத்திருவிழாவில் நேற்று கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சி றப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.