உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா!

முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா!

உடுமலை : பூளவாடி, முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா, 9ம் தேதி வரை நடக்கிறது. உடுமலை, பூளவாடியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில்,சித்திரைத் திருவிழா நேற்றுமுன்தினம் திருக்கம்பம் போடுதலுடன் துவங்கியது. நேற்று காலை கொடியேற்றப்பட்டது. மாலை 6.00 மணிக்கு, அம்மனுக்கு தீர்த்தம் செலுத்தப்பட்டது. இரவு 9.00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை 6.00 மணிக்கு புஷ்ப அலங்கார பூஜையும், 7.00 மணி முதல் மாவிளக்கு, பூவோடு செலுத்துதலும் நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு, அம்மன் திருக்கோவிலுக்கு எழுந்தருளுகிறார். இரவு 9.00 மணிக்கு, திருக்கம்பம் கங்கையில் விடப்படுகிறது. நாளை காலை 9.00 மணிக்கு, அம்மன் வீதியுலாவும், மாலை 4.00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. இரவு 10.00 மணிக்கு, சக்தி கும்பம் கங்கையில் விடப்படுகிறது. 9ம் தேதி இரவு 7.00 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிேஷகம், ஆராதனையுடன் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !