உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் தியாகராஜர் கீர்த்தனை நிகழ்ச்சி: 300 கலைஞர்கள் பங்கேற்பு!

திருவாரூர் தியாகராஜர் கீர்த்தனை நிகழ்ச்சி: 300 கலைஞர்கள் பங்கேற்பு!

திருவாரூர்: திருவாரூரில், தியாகராஜர் ஸ்வாமி கோவில் வளாகத்தில் ஸங்கீத மும்மூர்த்தி ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடந்தது. விழா முடிவில், 300க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்று, ஸ்ரீ தியாகராஜர் ஸ்வாமி கீர்த்தனைகளை ஒரேநேரத்தில் இசைத்தனர். கர்நாடக ஸங்கீத மும்மூர்த்திகள் என, தியாகராஜர் ஸ்வாமிகள், முத்துசாமி தீட்சிதர் ஸ்வாமிகள், ஹேமா சாஸ்திரி ஸ்வாமிகள் போற்றப்படுகின்றனர். இவர்கள், மூவருமே திருவாரூரில் பிறந்தவர்கள். இம்மூவரின் ஜெயந்திவிழா காஞ்சி காமகோடி பீட சேவா சமிதி சார்பில் வருடம்தோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் ஸ்வாமி கோவில் வளாகத்தில் நடப்பாண்டு கடந்த 30ம் தேதி துவங்கிய விழா நேற்றுடன் நிறைவடைந்தது. ஸ்ரீ தியாகராஜர் ஸ்வாமி பிறந்ததினமான சித்திரை மாதம் பூஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு, திருவாரூரிலுள்ள புதுத்தெரு இல்லத்தில் நேற்றுக்காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. இதில், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பல்வேறு பிரபல இசை குழுவினர், கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ தியாகராஜர் ஸ்வாமி கீர்த்தனைகளை ஒரே நேரத்தில் இசைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !