உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திரகாளியம்மன் கோயில் தீமிதி விழா

பத்திரகாளியம்மன் கோயில் தீமிதி விழா

 பொறையாறு:  நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சந்திரப்பாடி பத்திரகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா  கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  முக்கிய விழாவான அம்பாள் வீதியுலா  ,  கோ பூஜை, சுமங்கலி பூஜை, ஊஞ்சல் அலங்காரத்துடன் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.  பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை ஆகியவற்றை தொடர்ந்து   அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்தனர்.  இரவு கொடி  இறக்கும் வைபவம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !