உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவரங்குளம், ஆலங்குடி பகுதி கோவில்களில் திருவிழா- தேரோட்டம்

திருவரங்குளம், ஆலங்குடி பகுதி கோவில்களில் திருவிழா- தேரோட்டம்

திருவரங்குளம்:  திருவரங்குளம் அருகே உள்ள திருமலைராயசமுத்திரம்  அங்காள பரமேஸ் வரி அம்பாள்  கோவில் திரு விழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து வீதிகள் தோறும் கோலமிட்டு, வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டா டினர். முன்னதாக கோவிலில் அம்பாளுக்கு அபிஷேக, ஆரா தனைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது.பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்தும், 18, 21 அடி நீள வேல் குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இன்று( மாலை நல்லராமன் களப் பலி காட்சியும், நாளை  மாலை அர்ச் சுணன் தபசு காட்சியும் நடக் கிறது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !