மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :4167 days ago
நாகர்கோவில் : ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண விழா நடந்தது. காலை 10.30 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக மீனாட்சி அம்மன் தபசுக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை சுந்தரேஸ்வரர், அம்மன் இருக்கும் இடத்திற்கு சென்று மாலை மாற்றும் நிகழ்ச்சியு ம் நடைபெற்றது. விழாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறுவது போன்ற சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் ஞானசேகர், மேலாளர் ராமசந்திரன், ஹகாரியம் சேதுராமர் ஐயர் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை கோயில் மேல்சாந்தி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்தினார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.