உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொட்டியம் கோவில் கும்பாபிஷேக விழா

தொட்டியம் கோவில் கும்பாபிஷேக விழா

கள்ளக்குறிச்சி: தொட்டியம் அண்ணா நகர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த தொட்டியம் அண்ணா நகரில் மகாமாரியம்மன் கோவிலில், திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடு, புன்னியாகவனம், அங்குரார்பணம், வாஸ்துசாந்தி பூஜைகள் செய்தனர். கும்ப கலசங்களில் விநாயகர், மாரியம்மன் தெய்வங்களை ஆவாகனம் செய்து யாகசாலை பிரவேசம் நடந்தது. வேதிகை அர்ச்சனை யாகம் நடந்தது. நேற்று காலை சூரிய வழிபாடு, நாடி சந்தானம் வைபவங்களுக்கு பின் யாாகசாலை பூஜைகள் செய்து வைத்தனர். காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் விநாயகர், மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !