தீவனூர் கோவிலில் தேர் திருவிழா
ADDED :4166 days ago
திண்டிவனம்: தீவனூர் விநாயகர் கோவிலில் நேற்று தேர் திருவிழா நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூரில் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, 1008 பால்குட ஊர்வலம், திருக்கல்யாண உற்சவம், சுவாமி மாட ஊர்வலம் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.