உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தூர் வைப்பாற்றில் இறங்கினார் கள்ளழகர்!

சாத்தூர் வைப்பாற்றில் இறங்கினார் கள்ளழகர்!

சாத்தூர் : சாத்தூர் வைப்பாற்றில், பச்சைபட்டுத்தியப்படி கள்ளழகர் இறங்கினார். சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில், சித்ராபவுர்ணமியை யொட்டி, ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோயில் வளாகத்தில், குதிரை வாகனத்தில் வீற்றிருந்த பெருமாள்சுவாமி ,பச்சைபட்டு அணிந்தப்படி, கள்ளழகராக ரதவீதிகள் வழியாக வலம் வந்தார். இதன் பின் வைப்பாற்றில் இறங்கினார். அங்குள்ள திருக்கண்ணில் எழுந்தருளிய சுவாமிக்கு, பக்தர்கள், சர்க்கரை கும்பாவில் தீபம் ஏற்றியும், கற்கண்டு, சர்க்கரை, அன்னதானம் வழங்கியும், முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனர். இதன் பின், வைப்பாற்றில் இருந்து புறப்பட்ட சுவாமி,பெரியகொல்லபட்டி சென்றடைந்தார். அங்கு முக்கியவீதிகளில் வலம் வந்தார். வானவேடிக்கை மற்றும் பல்வேறு அபிஷேக அலங்காரத்துடன், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வரும் வெள்ளியன்று காலை கோயிலை வந்தடைகிறார். ஏற்பாடுகளை பெரியகொல்லப்பட்டி கிராமத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !