சாது சங்கர மடத்தில் பவுர்ணமி அபிஷேகம்!
ADDED :4169 days ago
ஆர்.கே.பேட்டை : சித்ரா பவுர்ணமியை ஒட்டி, வங்கனூர் சாது சங்கர மடத்தில் அபிஷேகம் நடந்தது.வங்கனூர், செவிண்டியம்மன் கோவில் எதிரே உள்ளது சாது சங்கர மடம். இந்த மடத்தில் நேற்று, சித்ரா பவுர்ணமியை ஒட்டி, சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, சுவாமியை அபிஷேக தரிசனம் செய்தனர்.