உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சித்திரை தேர்பவனி!

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சித்திரை தேர்பவனி!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் சித்திரைத் தேர்பவனி வைபவம் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவம் 10 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று சித்ரா பவுர்ணமி திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. அதிகாலை சுப்ரபாத சேவை, கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் செய்து வைக்கப்பட்டது. உபயநாச்சியார் சகிதம் பெருமாள் உற்சவர்களுக்கு அலங்கார திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்தனர். மந்தைவெளியில் உள்ள திருத்தேருக்கு விஸ்வக்சேனர் வழிபாடு, புன்னியாவதனம் நடத்தப்பட்டது. பெருமாள் தாயாரை தேரில் எழுந்தருளச் செய்து சாற்றுமுறை, சேவை, ஆராதனை நடந்தது. காலை 9:40 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., குணசேகர், தாசில்தார் முனுசாமி, அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் பாலகிருஷ்ணன், அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு, முன்னாள் எம்.எல்.ஏ., கேசவலு தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !