தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பூஜைகள் நிறுத்தம்!
ADDED :4162 days ago
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் நடந்த சிறப்பு பூஜைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மே 14 முதல் மே.19 வரை அழகர் ஆற்றில் இறங்குதல், திண்டுகக்ல் நகர்வலம் ஆகியவை நடக்கிறது. இதனால் பிரதி மாதம் நடக்கும் சுவாதி பூஜை, அமாவாசை பூஜைகள் நடக்காது. பகல் 11 முதல் 12 மணி வரை, மாலை 6.30 முதல் 7.30 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மற்ற நேரங்களில் நடை அடைக்கப்படும். மே20 முதல் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.