மருத்துவக்குடியில் "தீமிதி திருவிழா
ADDED :4162 days ago
கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஆடுதுறை அடுத்துள்ள மருத்துவக்குடி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். சிறப்பு பெற்ற இக்கோவிலின் தீமிதி தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடப்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டு, 110வது ஆண்டாக தீமிதி தேர்த்திருவிழா நேற்று முன் தினம் மாலை நடந்தது. முன்னதாக ஆடுதுறை வீரசோழன் ஆற்றிலிருந்து யானை முன்னே செல்ல, தொடர்ந்து கேரள சென்டை மேளம் முழங்க, பாண்டு வாத்தியம், குதிரை ஆட்டம், வான வேடிக்கையுடன் கங்கனம் கட்டி பால்குடம், அலகுகாவடியுடன் ஊர்வலமாக புறப்பட்டு தேரினை தூக்கி கொண்டு, ஆடுதுறை கடைவீதி, காளியம்மன் கோவில் ரயிலடி வழியாக மருத்துவக்குடி திரௌபதியம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.