சக்தி விநாயகர் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா
ADDED :4162 days ago
செங்கல்பட்டு : செங்கல்பட்டில், சக்தி விநாயகர் கோவில் சித்திரை பவுர்ணமி விழா நேற்று நடந்தது.செங்கல்பட்டு, சக்தி விநாயகர் கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், சித்திரை பவுர்ணமி விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழா நேற்று காலை நடந்தது. காலை 7:00 மணிக்கு, விநாயகருக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. மாலையில், சக்தி விநாயகருக்கு, சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. இரவு, சக்தி விநயாகர் மற்றும் கல்யாண சுப்ரமணியர் சுவாமி திருவீதி உலா நடந்தது.