ராகவேந்திரர் கோவிலில் கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை விழா!
ADDED :4164 days ago
புதுச்சேரி: ராகவேந்திரர் கோவிலில், கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முத்திரைப்பாளையம் அடுத்த குரும்பாப்பட்டில், ராகவேந்திர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, சித்ரா பவுர்ணமியான நேற்று முன்தினம் காலை, நாலரை அடி உயரமுள்ள, பஞ்சலோக, கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாலாஜிராவ், தேவராஜன் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க நடந்த பிரதிஷ்டை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, கிருஷ்ணர் சிலைக்கு, பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்து வழிபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.