விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் புதுச்சேரியில் 18ம் தேதி நடக்கிறது
புதுச்சேரி: புதுச்சேரியில், வரும் 18ம் தேதி விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், நடக்கிறது. ஸ்ரீ லட்சுமி விஷ்ணு சகஸ்ஹர நாம மண்டலி தலைவர் ராஜாராமன், நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் 10ம் ஆண்டு, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், வரும் 18ம் தேதி, புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து மண்டலியின் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்த நிகழ்ச்சி, உலக மக்களின் நன்மைக்காகவும் மற்றும் உலக மக்கள் சகல சவுபாக்கியங்களை பெறும் வகையில், 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆவர்த்தி என 12 ஆவர்த்திகளாக, விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடைபெற உள்ளது. முதல் நிகழ்ச்சியாக காலை 5.30 மணிக்கு , நேரு வீதியிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் தொடர்பு மையத்தில் சுப்ரபாதம் சேவித்தல் நடைபெற்ற பின், அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சுவாமி பக்தர்கள் புடைசூழ நகர சங்கீர்த்தனம், பஜனை, நாமாவளி மேள தாளத்துடன் ஊர்வலமாக, ஜெயராம் திருமண நிலையத்தை அடைகின்றது. நிகழ்ச்சியில், மண்டலியின் நிறுவனர் ஜனார்த்தன ராமானுஜதாசன், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன், உ.வே.துஷ்யந்த்ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு உபன்யாசம் நிகழ்த்துகின்றனர்.சகஸ்ரநாம பாராயணத்தை, பெங்களூரு இஸ்கான் அமைப்பின் இயக்குனர் பிரபு துவக்கி வைக்கிறார். மாலை 3.30 மணிக்கு, விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ராமாயணம் என்ற தலைப்பில் உபன்யாசம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.