தக்கலை பெருமாள் கோயிலில் ஐம்பெரும் விழா!
நாகர்கோவில் : தக்கலை பெருமாள் கோயிலில் 37-வது பிரித்ஷ்டை விழா, இந்து சகோதர இயக்கத்தின் 43-வுது ஆண்டு தொடக்கம், சமய வகுப்பு 43-வது ஆண்டு தொடக்கம், பக்தர்கள் குடும்ப சங்கம் விழா, லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை 40-வது ஆண்டு தொடக்க விழா ஆகிய ஐம்பெரும் விழா கடந்த 10-ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் பிரதிஷ்டை தின விழாவில் இரவு 8.30 மணிக்கு சாது சம்மேளம் நிகழ்ச்சியில் பெருங்குளம் சன்னிதானம் சீர்வளர்ச்சீர் கல்யாணசுந்தர தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், வெள்ளிமலை ஸ்ரீமத் சுவாமி கருணானந்தஜி மகராஜ், திருக்குற்றாலம் ஸ்ரீமத் சுவாமி அகிலான்ந்தஜி மகராஜ், அம்பாச முத்திரம் ஸ்ரீமத் சுவாமி ராமகிருஷ்ணானந்தஜி மகராஜ், கன்னியாகுமரி ஸ்ரீமத் சுவாமி முக்தி சொரூபானந்தஜி மகராஜ், குமாரகோவில் ஷமத் சுவாமி பிரணவானந்தஜி மகராஜ் உள்ளிட்ட 15 சுவாமிகள் பங்கேற்றனர். வெள்ளிமலை சைதன்யானந்தஜி மகராஜ், ஜெபவேள்விகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஆன்மீக உரையாற்றினார். 4-ம் நாள் விழாவின் போது நடைபெற்ற ஆன்மிக அரங்கில் கேரள மாநில ஹிந்து ஐக்கியவேதி தலைவர் சசிகலா டீச்சர் பேசினார். விழா ஏற்பாடுகளை இந்து சகோதர இயக்கத்தினர் செய்திருந்தனர்.