உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம்!

நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம்!

இடைப்பாடி: இடைப்பாடியில் உள்ள பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம், நான்கு நாட்கள் நடந்தது. இடைப்பாடியில் உள்ள பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் ஸ்வாமி ஊர்வலம் நடந்தது. கடந்த, 11ம் தேதி, தேவகிரி அம்மனுக்கும், நஞ்சுண்டேஸ்வரர் ஸ்வாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தில், 2,000க்கும் மேற்பட்ட கட்டளைதாரர்கள் மற்றும் இடைப்பாடி சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்று இரவு, தேவகிரி அம்மனுடன், நஞ்சுண்டேஸ்வரர் ஸவாமி முத்துரதத்தில் எழுந்தருளி, இடைப்பாடி நகரை பவனி வந்தார். சித்திரை தேர்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 12ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, நான்கு நாட்கள் தேரில் பவனி வந்த நஞ்சுண்டேஸ்வரரும், தேவகிரி அம்மனும், நேற்று, கோவிலை வந்து அடைந்தனர். நேற்று இரவு சத்தாபரண நிகழச்சியில், இடைப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமப்புற மக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !