கோவில் புரையூரில் கல்யாண உற்சவம்
ADDED :4165 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை அருகே வேடியப்பன்-சேஷியம்மன் கல்யாண வைபவம் நடந்தது. அவலூர்பேட்டை அடுத்த கோவில்புரையூர் தித்திக் கொல்லையில் வேடியப்பன்-சேஷியம்மன் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. கிராமத்திலிருந்து தட்டு வரிசையை ஊர்வலமாக கோவிலுக்கு கிராம மக்கள் எடுத்து வந்தனர். சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் நடந்தது. விழா குழுவினர்கள், கிராம மக்கள், தர்மகர்த்தா வேடி அஞ்சலா உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கைலங்கிரியில் அவதரிக்கும் சிவனும், சக்தியும் மகாபாரதத்தில் அர்ச்சுனன் காட்டில் செய்த தவத்தை ஏற்று உருமாறி வேடியப்பன், சேஷியம்மனாகவும் பெயர் பெற்றுள்ளனர்.