சித்ரா பவுர்ணமி உற்சவம் புஷ்ப பல்லக்குகளில் உலா!
வேலூர்: வேலூரில், சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, ஏழு புஷ்ப பல்லக்குகளில், விடிய, விடிய மக்கள் வெள்ளத்தில் ஸ்வாமிகள் பவனி வந்தது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ஆண்டுதோறும், வேலூரில், புஷ்ப பல்லக்குகளில், ஸ்வாமி திருவீதி உலா வரும் புஷ்ப பல்லக்கு திருவிழா நடக்கும். இந்தாண்டு, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ஏழு புஷ்ப பல்லக்குகளில், ஸ்வாமிகள் திருவீதி உலா நேற்று முன் தினம் இரவு நடந்தது. இதற்காக, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர், தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர், சேண்பாக்கம் செல்வவிநாயகர், வேம்புலி அம்மன், கனக துர்கை அம்மன், விஷ்ணு துர்கை அம்மன், லட்சுமி நாராயணன் ஆகிய ஸ்வாமிகள், ஏழு புஷ்ப பல்லக்குகளில், முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது. வேலூர் அண்ணா சாலையில், ஏழு புஷ்ப பல்லக்குகளும், ஒன்றின் பின் ஒன்றாக வந்தது. விழாவை முன்னிடடு, ஏழு இன்னிசை கச்சேரிகள், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் ஸ்வாமியை தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்ட எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், 500 போலீ ஸார் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டனர்.