உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவ கோவில் சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு

வீரராகவ கோவில் சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு

திருவள்ளூர் : வீரராகவ பெருமாள் கோவிலில், கடந்த, 4ம் தேதி துவங்கிய சித்திரை பிரம்மோற்சவ விழா, இன்று விடையாற்றி நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம், கடந்த, 4ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலை, உற்சவர் வீரராகவர், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில், தினமும், பத்தி உலா நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான, கருட வாகன சேவை, கடந்த 6ம் தேதியும், திருத்தேர் உற்சவம், 10ம் தேதியும், தீர்த்தவாரி, 12ம் தேதியும் சிறப்பாக நடந்தது. விடையாற்றி உற்சவத்தின் முதல் நாளாக, கடந்த, 13ம் தேதி, கண்ணாடி பல்லக்கில் வீதி உலா வந்தார். திருமஞ்சனம், கடந்த, 14 மற்றும் 15ம் தேதிகளில் நடந்தது. இன்று, மாலை, ௫:௦௦ மணிக்கு, திருமஞ்சனமும், புஷ்ப பல்லக்கில், புறப்பாடு, இரவு ௯:௦௦ மணிக்கும் நடைபெறுகிறது. இன்றுடன், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !