உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கட நிவாரண சகஸ்ர ஹோமம்!

சங்கட நிவாரண சகஸ்ர ஹோமம்!

திருவள்ளூர் : சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நாளை, 17ம் தேதி, வாலீஸ்வரர் கோவிலில் உள்ள காரிய சித்தி கணபதிக்கு, சங்கட நிவாரண சகஸ்ர ஹோமம் நடக்கிறது. பொன்னேரி அடுத்த, பஞ்செட்டி அருகே, நத்தம் கிராமத்தில் ஆனந்தவல்லி உடனுறை வாலீஸ்வரர் கோவில் உள்ளது. பரிகார ஸ்தலமான இக்கோவிலில் உள்ள, காரிய சித்தி கணபதி சன்னிதியில், ஒவ்வொரு மாதமும், சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று, வழிபாடு, சிறப்பாக நடைபெறுகிறது. நாளை, 17ம் தேதி, காலை 9:00 மணி முதல், பிற்பகல் 12:30 மணி வரை, சங்கட நிவாரண சகஸ்ர ஹோமம், சகஸ்ர நாம அர்ச்சனையும் நடைபெறுகிறது. பின், ஐந்து வகை பழங்களால், சிறப்பு அலங்காரம் செய்ய்பட்டு, மகா தீபாராதனை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !