உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி சிறப்பு பஸ்கள் : ரூ. 7.4 கோடி வருவாய்!

சித்ரா பவுர்ணமி சிறப்பு பஸ்கள் : ரூ. 7.4 கோடி வருவாய்!

சித்ரா பவுர்ணமிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கியதன் மூலம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம், 7.4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் வருவர். சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் வருவது சிறப்பு. பவுர்ணமி திதியானது, கடந்த, 13ம் தேதி நள்ளிரவு முதல், 14ம் தேதி நள்ளிரவு வரை இருந்தது. இந்த கால இடைவெளிக்குள் கிரிவலம் செல்ல பக்தர்கள், திருவண்ணாமலையில் கூடினர். பக்தர்களின் வசதிக்காக, விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை, கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரத்தில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள், பயணிகளின் வருகைக்கு ஏற்ப இயக்கப்பட்டன. இது குறித்து, விழுப்புரம் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த, 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்கள், திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வந்து செல்லும் வகையில், சிறப்பு பஸ்களை இயக்கினோம். இதன் மூலம், 7.4 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !