ஆனைமலையில் நரசிம்மர் ஜெயந்தி விழா!
ADDED :4159 days ago
ஆனைமலை : ஆனைமலையில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த 12ம்தேதி மாலை மகா திருமஞ்சனமும், 13ம் தேதி அதிகாலை, மகா கணபதி ஹோமம், மகா சுதர்சன, மகாலட்சுமி, மகா நரசிம்மர் ஹோமமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தன. அன்று மாலை இரண்ய சம்ஹாரம் விஸ்வரூப தரிசனமும் நடத்தப்பட்டது. இதையொட்டி தினமும் நரசிம்மருக்கு அபிேஷக ஆராதனை நடந்தன. நேற்று முன்தினம் காலை திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று மாலை நடந்த லட்சுமி நரசிம்மரின் திருவீதி உலாவில், உற்சவ மூர்த்தி, அலங்கரிக்கபட்ட வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.