கொல்லியங்குணத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :4494 days ago
மயிலம்: கொல்லியங்குணம் சுந்தரவிநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. விழாவையோட்டி சுந்தர விநாயகருக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாரதனை நடந்தது. மாலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், தயிர் போன்ற நறுமணப் பொருட்களினால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு மலர், அருகம்புல் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து நடந்த தீபாரதனை நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.