உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம்

ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சத்சங்கம் சார்பில் 49ம் ஆண்டு ராமநவமி மகோற்சவ விழா வரும் 25ம் தேதி துவங்குகிறது. திருக்கோவிலூர் சத்சங்கத்தின் சார்பில் கிழக்குவீதி ஆஞ்சநேயர் கோவிலில், 49ம் ஆண்டு ராமநவமி விழா வரும் 25ம் தேதி துவங்குகிறது. அன்று இரவு 7.30 மணிக்கு ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் விழாவை துவக்கி வைத்து அருளாசி வழங்குகிறார். அன்று முதல் தொடர்ந்து 9 நாட்களுக்கு தினசரி இரவு 7.30 மணிக்கு பரனூர் கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை 7 மணி முதல் 11 மணி வரை நடராஜசர்மா, ஸ்ரீமத் ராமாயண நவாக மூலபாராயணம் நடத்து கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அடுத்த மாதம் 3ம் தேதி காலை 10 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு திவ்யநாம பஜனையும், 4ம் தேதி காலை 8 மணிக்கு சீத்தா திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்படி, சத்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !