உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொப்புடையம்மன் கோயிலில் நாளை தேரோட்டம்

கொப்புடையம்மன் கோயிலில் நாளை தேரோட்டம்

காரைக்குடி : காரைக்குடி, கொப்புடையம்மன் கோயிலில், செவ்வாய் திருவிழா, மே 13 அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்படும், பக்தி உலாவும், மண்டகப்படி தீபாராதனையும், வாகன ஊர்வலமும் நடந்தது. எட்டாம் நாளான மே19 அன்று, முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நடக்கிறது. நாளை காலை,7:27 மணிக்கு மேல் காலை 9 மணிக்குள் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். அன்று மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து, தேரோட்டம் நடைபெறும். 21-ம் தேதி, காலை 9 மணிக்கு காட்டம்மன் கோயிலிலிருந்து, கொப்புடையம்மன் கோயிலுக்கு தேர் திரும்பும் நிகழ்ச்சி நடக்கும். அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோசாலி சுமதா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !