உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு பவுர்ணமி விழா நிறைவு

தாடிக்கொம்பு பவுர்ணமி விழா நிறைவு

தாடிக்கொம்பு : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள், மே.14ல் குடகனாற்றில் இறங்கினார். சுவாமி பல்லக்கில் திண்டுக்கல் நகர்வலம் புறப்பட்டு தாடிக்கொம்பு ரோடு கருப்பணசுவாமி கோயிலில் இரவு தங்கினார். மே 16ல் மேட்டுப்பட்டி, நெட்டுத்தெரு, கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதிகளிலும், மே.17ல் சேஷ வாகனத்தில் சன்னதி தெரு, கச்சேரி தெரு, காசுக்கடை சந்து, மெயின் ரோடுகளிலும், மே.18ல் பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலம் பூண்டு மேற்கு ரத வீதி, தாடிக்கொம்பு ரோடு வழியாக வலம் சென்று அங்கு நகர் தோட்டத்தில் இரவு தங்கினார். இன்று காலை கருட வாகனத்தில் பறப்பட்டு சுவாமி தாடிக்கொம்பு கோயிலை சென்றடைகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !