உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் உண்டியலில் 1 கோடியே 70 லட்சம் வசூல்!

பழநி கோயில் உண்டியலில் 1 கோடியே 70 லட்சம் வசூல்!

பழநி: பழநிகோயில் உண்டியலில், 28 நாட்களில், ஒரு கோடியே 70 லட்சத்து 70 ஆயிரத்து 870 ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயில், கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில், ரொக்கமாக ஒரு கோடியே 70 லட்சத்து 70 ஆயிரத்து 870 ரூபாயும், தங்கம் 630 கிராமும், வெள்ளி 7 ஆயிரத்து 290 கிராமும், வெளிநாட்டு கரன்சி 165 ம் கிடைத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியிலான, நெல்லிக்கனி மாலை, கப்பல், தாலி, வளையல், வேல், செயின், மோதிரம், நாணயம், ஆள் ரூபம், வேல், பாதம், கொலுசு, வீடு போன்றவற்றையும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !