கொக்காம்பாளையம் மாரியம்மன் தேரில் வீதியுலா!
ADDED :4159 days ago
மங்கலம்பேட்டை: கொக்காம்பாளையம் மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்தது. மங்கலம்பேட்டை அடுத்த கொக்காம்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் காலை 9:00 மணிக்கு முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 16ம் @ததி தேர்த் திருவிழாவையொட்டி, மாலை 5:30 மணியளவில் அலங்கரித்த தேரில் முத்து மாரியம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். முன்னதாக பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.