சுந்தரவரசித்தி விநாயகர் கோவில் வசந்த உற்சவம் துவக்கம்!
ADDED :4261 days ago
திண்டிவனம்: சுந்தரவரசித்தி விநாயகர் கோவில் வசந்த உற்சவம் நேற்று முதல் துவங்கியது. திண்டிவனம் சர்க்கார்தோப்பு சுந்தர வரசித்தி விநாயகர் கோவில் வசந்த உற்சவம் நேற்று (19 ம் தேதி) துவங்கியது. 25 ம் தேதி வரை விழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 23 ம் தேதி இரவு 7 மணிக்கு முச்சந்தி உற்சவம், 24 ம் தேதி இரவு 7 மணிக்கு பவானி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகிறார்கள்.