வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED :4159 days ago
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா வரும் 4ம் தேதி மாலை துவங்குகிறது. அன்று மாலை பகவத் அனுக்ஞை, மிருத் சங்கிரனம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்சவாகனம், சிம்ம வாகனம், அனுமந்த் வாகனம், சேஷ வாகனம், கருட வாகன மகோற்சவம், யானை வாக னத்தில் உற்சவர் காட்சியளிக்கிறார். வரும் 11ம் தேதி மாலை திருக்கல்யாணம், இரவு இந்திர விமானத்திலும் காட்சியளிக்கிறார். வரும் 13ம் தேதி காலை 8:15 முதல் 9:45 மணிக்குள், மிதுன லக்னத்தில் திருத்தேர் மகோற்சவம் நடக்கிறது. தொடர்ந்து சந்திர பிரபை மற்றும் திருமஞ்சனத்துடன் விழா நிறைவு பெறுகிறது.