தர்மபுரி கங்கை அம்மன் கோவில் திருவிழா!
ADDED :4159 days ago
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா, பெரியப்பட்டி கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோவில் திருவிழா, கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை, 7 மணிக்கு கரகம் எடுத்து ஊர் வருதல், மதியம், 2 மணிக்கு, கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தல், இரவு 8 மணிக்கு, மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், இரவு, 9 மணிக்கு, வாண வேடிக்கையுடன், அம்மன் பூப்பல்லக்கில் பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை அதிகாலை கங்கை அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 23ம் தேதி இரவு 10 மணிக்கு கலைநிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.