உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரகாளியம்மன் கோவில் தேரோட்ட விழா: பக்தர்கள் வழிபாடு!

வீரகாளியம்மன் கோவில் தேரோட்ட விழா: பக்தர்கள் வழிபாடு!

கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே பெரம்பூர் வீரகாளியம்மன் கோவில் தேரோட்ட விழாவில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஐந்தாயிரம் பக்தர்கள் பங்கேற்று, அம்மனை பக்தி பெருக்குடன் வழிபட்டனர். புதுகை மாவட்டத்திலுள்ள கந்தர்வக்கோட்டை அருகே, பெரம்பூர் கிராமத்தில், வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா கடந்த, 17ம் தேதி துவங்கியது. இதையடுத்து, மறுநாள் 18ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, முக்கிய விழாவான தேரோட்டம் விமரிசையாக பெரம்பூர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. தேர் நிலையை வந்தடைந்தவுடன் கோவில் பூசாரிகளுக்கு தாரை, தப்பட்டை உடுக்கடித்து, சாமி அழைக்கப்பட்டு, தேரடியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாக்கள் காலை, 6 மணியளவில் வெட்டப்பட்டு, பச்சை ரத்தத்தை பூசாரிகள் ஆக்ரோஷமாக குடித்தனர். சுற்றுவட்டார கிராமங்கள் கந்தர்வக்கோட்டை, அக்கச்சிப்பட்டி, நடுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஐந்தாயிரம் பக்தர்கள் குவிந்து, வீரகாளியம்மனை பக்தி பெருக்குடன் வழிபட்டனர். விழா ஏற்பாட்டை ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !