விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஜெயேந்திரர் சுவாமி தரிசனம்!
ADDED :4158 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், காஞ்சி ஜெயேந்திரர் சுவாமி தரிசனம் செய்தார். கடலூர் மாவட் டம், விருத்தாசலம் விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் அவருக்கு, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. விருத்தகிரீஸ்வரர், அண்ணாமலையார், விருத்தாம்பிகை சுவாமிகளை தரிசனம் செய்துவிட்டு, 5:30 மணிக்கு புறப்பட்டார். கோவிலுக்கு வந்த ஜெயேந்திரருக்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், மாவட்டத் தலைவர் அருணாசலம் தலைமையில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் சங்கர், கண்ணன் சாஸ்திரிகள், கிளைத் தலைவர் விருத்தகிரி, ஸ்ரீதர் உட்பட பலர் உடனிருந்தனர்.