பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு!
ADDED :4157 days ago
பேரூர் : பட்டீஸ்வரர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில், 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வசூலாகியிருந்தது. இதில், பக்தர்கள் நேர்த்திக் கடனாக 30 கிராம் தங்கமும், 125 கிராம் வெள்ளியும் செலுத்தியிருந்தனர். ஏப்., 9ம் தேதிக்கு பின், பேரூர் பட்டீஸ்வரர் கோவில்உண்டியல் திறக்கப்பட்டது. இதில், பொது உண்டியல் திறக்கப்பட்டு எண்ணியதில், 5 லட்சத்து 19 ஆயிரத்து 795 ரூபாயும், யானைபராமரிப்பு உண்டியல் திறக்கப்பட்டதில்14 ஆயிரத்து 542 ரூபாயும் இருந்தது. இந்துசமயஅறநிலையத்துறையின், திருப்பூர் மாவட்டஉதவி ஆணையர் ஆனந்த் தலைமையில், காணிக்கை எண்ணப்பட்டது. மேலும், பக்தர்கள் நேர்த்திக்கடனாக 30 கிராம் தங்கமும், 125 கிராம் வெள்ளியும் செலுத்தியிருந்தனர். பேரூர் கோவில் உதவிகமிஷனர் அனிதா(பொறுப்பு), மேற்கு ஆய்வர் சீனிவாசன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.